டெம்பா பவுமா அதிரடி நீக்கம்… எய்டன் மார்கரமிற்கு கேப்டன் பதவி; டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு
ஜூன் மாதம் துவங்க இருகும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் 2ம் தேதி துவங்க இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி., நாளையுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக மார்கரம் நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமாவிற்கு அணியில் இடமே கொடுக்கப்படவில்லை. மார்கரம் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசன், மார்கோ ஜென்சன், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்கியா, ரபாடா, சம்சி, டி காக் போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
அதே போன்று ஓட்னில் பார்ட்மேன், கெரால்டு கோட்சி, திரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்களும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி;
மார்கரம் (கேப்டன்), ஒட்னில் பார்ட்மன், கெரால்ட் கோட்சி, குவிண்டன் டி காக், பார்டூன், ரீசா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜென்சன், ஹென்ரிச் கிளாசன், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்கியா, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் சம்சி, திரிஸ்டன் ஸ்டப்ஸ்.
ரிசர்வ் வீரர்கள்;
பார்கர், லுங்கி நிகிடி