இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… ரீ எண்ட்ரீ  கொடுக்கும் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !!

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… ரீ எண்ட்ரீ  கொடுக்கும் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அரயிறுதி போட்டிக்கான இரு அணிகளும் தங்களது ஆடும் லெவனில் தலா 2 மாற்றங்கள் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் இருந்து ஸ்டோய்னிஸ் மற்றும் சியன் அபாட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவனில் நிகிடி மற்றும் பெல்லால்கியோ ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தப்ரைஸ் சம்சி மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவன்; 

குவிண்டன் டி காக், டெம்பா பவுமா, ரசி வாண்டர் டூசன், மார்கரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜென்சன், கேசவ் மஹராஜ், கெரால்ட், காகிசோ ரபாடா, தப்ரைஸ் சம்சி.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்; 

டர்வீஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுசேன், கிளன் மேக்ஸ்வெல், ஜாஸ் இங்லீஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹசில்வுட்.

Mohamed:

This website uses cookies.