டி.20 உலகக்கோப்பை ; வங்கதேசத்திற்கு எதிராக கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா !!

டி.20 உலகக்கோப்பை ; வங்கதேசத்திற்கு எதிராக கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. லுங்கி நிகிடி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்சி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் வங்கதேச அணியும் ஒரு மாற்றத்துடன் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்கிறது. யாசிர் அலி ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மெஹ்தி ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியின் ஆடும் லெவன்;

நஜ்முல் ஹூசைன், சவ்மியா சர்கார், லிட்டன் தாஸ், ஷாகின் அல் ஹசன், ஆஃபிஃப் ஹூசைன், மெஹ்தி ஹசன், நூருல் ஹசன், மொசாதக் ஹூசைன், தஸ்கின் அஹமத், ஹசன் மஹ்முத், முஸ்தபிசுர் ரஹ்மான்.

தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவன்;

குவிண்டன் டி காக், டெம்பா பவுமா, ரிலே ருச்சோவ், மார்கரம், டேவிட் மில்லர், திரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னல், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்கியா, தப்ரைஸ் சம்சி.

Mohamed:

This website uses cookies.