பிரச்சினைக்குரிய நெ.4ல் ரகானே ஆடுவார் : கோலி சூசகம்

பிரச்சினைக்குரிய நெ.4ல் ரகானே ஆடுவார் : கோலி சூசகம்

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. நாளை நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் நெ.4ல் ரகானே ஆடுவார் என கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். ரகானே இதுவரை ஆடியுள்ள 84 ஒருநாள் போட்டிகளில் 54 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடியுள்ளார்.

ஆனால் சென்ற முறை ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருந்த போது 5 ஒருநாள் போட்டி தொடரில் ரகானே ஆடினார். இந்த தொடரில் நெ.4ல் ஆடிய ரகானே அடுத்தடுத்து 47, 87, 89, 50 ரண தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்து அசத்தினார்.

தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளது. இதில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்ரிக்காவும் மோதுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி, டர்பனில் உள்ள கிங்க்ஸ்மேட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் முதுகெலும்பாக இருப்பவர் கேப்டன் விராட் கோலி.

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வீரர்களில், இவர்தான் அதிக ரன்களை(286) குவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை (1460) குவித்த வீரரும் கோலிதான். எனவே இந்த 6 ஒருநாள் போட்டிகளிலும் அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தென்னாப்ரிக்காவின் இளம் வீரரான லுங்கி கிடியின் பந்து வீச்சு கோலிக்கு சற்று சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் தொடரில் நான்கு முறை கோலியின் விக்கெட்டை இவர் வீழ்த்தியுள்ளார்.

Rahane has ample experience of handling tricky situations and seems the ideal fit at the crucial spot, especially because the other candidates for the same, over the last year and a half, have been largely dismal.

 

அத்துடன் இவரது பந்துக்களை, கோலி கவனத்துடன் எதிர்கொள்ளும் நிலைகளும் ஏற்பட்டது. எனவே ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரிடையே சரியான மோதல் இருக்கும் என கருதப்படுகிறது.

Editor:

This website uses cookies.