கபில் தேவ் சாதனையை முறியடிக்கப் போகிறார் விராட் கோலி
கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த வெளிநாட்டு தொடர் விராட் கோலிக்கு ஒரு மிகப்பெரிய சோதனை எனவும் முன்னாள் வீர்ரகள் பலர் கூறி வருகின்றனர்.
மேலும், விராட் கோலியும் சாதிக்கும் எண்ணத்துடன் தான் இங்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டை மிகச்சிறப்பாக முடித்திருக்கிறார் விராட் கோலி. சென்ற வருடம் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீர்ரகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட்.
மேலும், சென்று வருஷம் மட்டும் இந்திய அணி 16 தொடரில் விளையாடியது. இடன்ஹா தொடரில் ஒன்றில் கூட தோற்காமல் இந்திய அணியை வழி நடித்தி சாதனை படைத்துள்ளார் விராட். இதனால் இந்த வருடத்தையும் வெற்றியுடன் துவக்க முனைப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்
ஏனெனில் அடுத்த 18 மாதங்கள் இந்திய அணி வெளிநாடுகளில் மட்டுமே விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என வெளிநாடுகளில் சுற்றுபயணம் செய்து விளையாட உள்ளதால், முதல் வெளிநாட்டு சுற்றுபயணத்தை வெற்றியுடன் துவக்க இருக்கிறார் விராட்.
29 வயதாகும் விராட் கோலி தற்போது வரை 32 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 29 வெற்றிகள் 9 ட்ரா மற்றும் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளார். இந்த தொடரில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி முன்னாள் ஜாம்பவான் வீரர் கேஒடன் கபில் தேவின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
கபில் தேவ் 34 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார்.
இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி உள்ள கேப்டன்கள் பட்டியல் :
1.எம்.எஸ்.தோணி – 60 போட்டி, 27 வெற்றி, 18 தோல்வி, 15 ட்ரா
2.சவுரவ் கங்குலி – 49 போட்டி, 21 வெற்றி, 13 தோல்வி, 15 ட்ரா,
3.முகமது அசாருதின் – 47 போட்டி, 14 வெற்றி, 14 தோல்வி, 19 ட்ரா,
4.சுனில் கவாஸ்கர் – 47 போட்டி, 9 வெற்றி, 8 தோல்வி, 30 ட்ரா,
5.மன்சூர் அலிகான் பட்டோடி – 40 போட்டி, 9 வெற்றி, 19 தோல்வி, 12 ட்ரா,
6.கபில் தேவ் – 34 போட்டி, 4 வெற்றி, 7 தோல்வி, 22 ட்ரா
7.விராட் கோலி – 32 போட்டி, 20 வெற்றி, 3 தோல்வி, 9 ட்ரா