பட்ட கஷ்டம் அனைத்தும் வீண்… ராசி இல்லாத தென் ஆப்ரிக்கா அணியின் விதியில் வெறித்தனமாக விளையாடிய மழை !!

பட்ட கஷ்டம் அனைத்தும் வீண்… ராசி இல்லாத தென் ஆப்ரிக்கா அணியின் விதியில் வெறித்தனமாக விளையாடிய மழை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை தேடி வந்த வெற்றியை மழை குறுக்கிட்டு தென் ஆப்ரிக்கா வீரர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் வீணாக்கியுள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் தலா 9ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மாதவேரா 35 ரன்களும், மில்டன் 18 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி விளையாடி முடித்தபின்பும் மழை குறுக்கிட்டதால் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 6 ஓவரில் 64 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் 6 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, இந்த போட்டியை பயன்படுத்தி தங்களது ரன் ரேட்டையும் உயர்த்தி கொள்ளும் வகையிலும், மீண்டும் மழை குறுக்கிடுவதற்குள் போட்டியை முடித்து 2 புள்ளிகளை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரரான டி காக் 18 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 3 ஓவரிலேயே 51 ரன்கள் எடுத்தது. அடுத்த இரண்டு ஓவர்களில் தென் ஆப்ரிக்கா அணி போட்டியையே முடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

Mohamed:

This website uses cookies.