தென்னாப்பிரிக்க வீர்ரருக்கு கொரோனா: மனவேதனையில் அவரே பதிவிட்ட ட்வீட்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 56,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி (Solo Nqweni) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது பற்றி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜிபிஎஸ் என்கிற அரியவகை நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டேன். 10 மாதங்களாக இந்த நோயை விரட்டப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதிதான் மீண்டு வந்திருக்கிறேன். காசநோயும் வந்தது. கல்லீரலும் சிறுநீரகமும் பழுதடைந்துள்ளன. இப்போது, கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏன் எல்லாமே நடக்கிறது என நிஜமாகவே தெரியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

26 வயது சோலோ, 2012-ல் தென் ஆப்பிரிக்க யு-19 அணியில் விளையாடியுள்ளார். ஈஸ்டர்ன் பிராவின்ஸ் அணிக்காக விளையாடிய சோலோ, லீக் கிரிக்கெட்டில் வாரியஸ் அணிக்காகவும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

நாடு முழுவதும் கொரோனாவால் 56,342 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 16,540 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், 37,916 பேர் கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவின் கோரதாண்டவத்தில் சிக்கித் தவிக்கும் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 700-ஐயும் நெருங்கி உள்ளது. குஜராத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 425 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 4-வது இடத்தில் இருந்த தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்தது. இதனால் வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்துக்கு சென்றது.
4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 5,980 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளன.

Sathish Kumar:

This website uses cookies.