ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு எதற்கு ஓய்வு கொடுத்தீர்கள் – முன்னால் வீரர் சந்தீப் பட்டீல் காட்டம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு என்பது கொடுத்தீர்கள் இது மிக முக்கியமான தொடர் என்று முன்னாள் தேர்வு குழு தலைவரும் இந்திய வீரருமான சந்திப்பில் காட்டமாக தேர்வு குழு தலைவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது வேலைப்பளு காரணமாக அவருக்கு ஓய்வு கொடுத்து அதை நான் வரவேற்கிறேன் ஆனால் அவருக்கு ஓய்வு கொடுத்தது தற்போது சரியல்ல. ஏனெனில் இது முக்கியமான தொடர் மேலும் அடுத்ததாக வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நம் நாட்டில் நடக்கும் தொடருக்கு ஓய்வு கொடுத்து இருக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று மாலை தொடங்குகிறது. 14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் ஹாங்காங்குடன் வரும் 18 ஆம் தேதி மோதும் இந்திய அணி, மறுநாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள தால் ரோகித் சர்மா தலைமையில் அணி களமிறங்குகிறது. தவான், கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, தோனி, புவேனே ஷ்வர் குமார், பும்ரா, சேஹல், குல்தீப் என இந்திய அணியின் கலவை அருமையாக இருக்கிறது.

தொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியில் காயம் காரணமாக சண்டி மால் விலகியுள்ளார். அணியில் இடம் கிடைக்காமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று தெரிகிறது.

அனைத்து ஆட்டங்களும் பகல்–இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. துபாயில் கடும் வெயில் வாட்டுவதால், அதை சமாளிக்க வீரர்கள் கடுமை யாக போராட வேண்டியிருக்கும். இங்குள்ள ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் முனைப்புடன் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நாளை தொடங்குகின்றன. நாளை தொடங்கி செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

 

 

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.