ஜம்மு காஷ்மீரின் தனிச்சிறப்பு சட்டப்பிரிவு 370 பாராளுமன்றத்தில் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவங்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல் மற்றும் எதிர் தாக்குதலை விளைவால் அங்கு வாழும் மக்கள் பலரும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். சில தீவிரவாத ஊடுருவலின் காரணமாகவும் உயிரிழக்க நேரிடுகிறது.
கடந்த இரு தினங்களாக தாக்குதல் மிகவும் தீவிரமடைந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
ஆதலால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதமாக இருந்த சட்ட பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டையும் பாராளுமன்ற கூட்டத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்து அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றினார். இதற்கு பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய அணியின் வீரர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் தற்போது மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்பு அந்தஸ்து நீக்கி மைல்கல் அமைத்துள்ளோம். இனி காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறும்” என்றார்.
அதேபோல் மக்களவை உறுப்பினர் கம்பிர், “இதுவரை யாரும் நிகழ்த்திராத ஒன்றை நாம் செய்துள்ளோம், இனி காஷ்மீரில் மூவர்ணக்கொடி பறக்கும்” என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகள் இதற்க்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதிக ஆதரவுடன் இந்த சட்ட திருத்தம் நிகழ்ந்துள்ளது.