ஸ்ரீசாந்தின் இந்திய அணித் தேர்வில் டி20 கேப்டனாக கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே அணியைத் தான் தேர்வு செய்யவேண்டும் என நான் விரும்புகிறேன். சுரேஷ் ரெய்னாவுக்கு மேலும் பாராட்டுகள் கிடைக்கப்பட வேண்டும். கோலி மீது மிகுந்த மரியாதை உண்டு. எனினும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்கிறேன். மற்ற வகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு கோலியே கேப்டனாக இருக்கலாம் என்றார்.
ஸ்ரீசாந்த்தின் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாகத் தன்னையும் பும்ராவையும் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் இவர், ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார்.இதில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இடம் பிடித்துள்ளனர். அடுத்த இரு இடங்களுக்கு விராத் கோஹ்லி, ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். லோகேஷ் ராகுலுக்கு 5வது இடம் வழங்கிய இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். ‛ஆல் -ரவுண்டர்களாக’ ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர். ‛சுழல்’ வீரராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ராவுடன், தன்னையும் சேர்த்துள்ளார
ஸ்ரீசாந்தின் இந்திய XI: ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கே.எல். ராகுல், தோனி, பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, ஸ்ரீசாந்த்.
இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் 13வது சீசன் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இதுவரை எந்த அணியிலும் இல்லாதபோதிலும், இந்த ஐபிஎல்லில் ஆடும் நம்பிக்கையில் உள்ளார் ஸ்ரீசாந்த்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்ரோபர் – நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படும் என தெரிகிறது. வரும் செப்டம்பரில் தான் ஸ்ரீசாந்த் மீதான தடை முடிகிறது. ஆனாலும் அவர் இந்த முறையே ஐபிஎல்லில் ஆடும் நம்பிக்கையில் உள்ளார்.
ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், ஐபிஎல்லில் எந்த அணி ஏலத்தில் எடுத்தாலும் அதில் அதில் ஆட தயாராக இருக்கிறேன். 2021 ஐபிஎல்லுக்கான ஏலத்தில் நான் இடம்பெறுவேன். 2020 ஐபிஎல்லில் கூட நான் ஆட வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக ஆடவில்லையென்றால், அதிகமான இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்., அப்படி பார்த்தால், எனக்கும் வாய்ப்பிருக்கிறது என்றார் ஸ்ரீசாந்த்.