இந்தியாவின் நெ.4 இடத்திற்கு தகுதியானவர் இவர்தான்: தேர்வுக்குழு தலைவர் பேச்சு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கான சரியான நபர் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டில் இருந்து நான்காவது இடத்திற்கு நிரந்தர வீரரை கண்டு பிடிக்காமல் இருக்கிறது. தேர்வுக்குழு பல்வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஒருவர் கூட அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அய்யர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

“I agree with both the versions of Rohit and Sunny sir. Rishabh is going through a bit of a rough period. He needs a couple of good knocks that can bring him back to his best.

இதனால் அவரை நான்காவது இடத்தில் இந்திய அணி களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் ஷ்ரேயாஸ் அய்யர். இலங்கை அணிக்கெதிராக விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். என்றாலும் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

“With regard to the point raised regarding pressure, Rishabh should definitely realise that pressure is part of the game at this level and the one who comes out of it is a true champion. He has examples in front of him in Virat and Rohit,” Prasad told to PTI.

இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நீங்கள் திரும்பி பார்த்தீர்கள் என்றால், 18 மாதங்களுக்கு முன் நாங்கள் விராட் கோலி ஓய்வில் இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர் சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரை தொடர்ச்சியாக அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது சிறந்த வீரராக வளர்ந்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரால் நான்காவது இடத்தை நிரப்ப முடியும்’’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.