ஸ்ரேயஸ் ஒரு வித்யாசமான கேப்டன்: சவுரவ் கங்குலி

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஓரு விதிவிலக்கான கேட்பன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற 2வது அணியாக உள்ளது டெல்லி கேப்பிடல்ஸ், அதுவும் 2012க்குப் பிறகு இந்த அணி ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஆடுகிறது.

இந்திய மற்றும் ஆர்சிபி கேப்டனான விராட் கோலியின் ஆர்சிபி தொடர் தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃபுக்கு தகுதி பெறுவது கடினமான சூழ்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் எழுச்சியைப் பாராட்டிய கங்குலி, “ஷ்ரேயஸ் அய்யர் ஒரு விதிவிலக்கான கேப்டன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் கங்குலி கூறியதாவது:

இதற்கான பெருமை பிளேயிங் லெவனில் ஆடும் அனைத்து வீரர்களையும் சாரும். நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி மட்டுமே, அவர்கள் நல்ல மனநிலையில் வைத்திருக்க மட்டுமே உதவுகிறோம் நான் கேப்டனாக இருக்கும் போது கூட பிளேயிங் லெவன் தான் எனக்கு முக்கியம். அவர்களுக்குத்தான் உண்மையான பெருமை போய்ச் சேர வேண்டும்.

அனைவரும் நன்றாக ஆடினர், ஷிகர் தவண் தனித்துவமாக ஆடுகிறார். ரிஷப் பந்து நல்ல பிட்ச்களில் வன்மையான பிட்ச்களில் அடித்து ஆடுகிறார். அவரும் பேட்டிங்கில் விதிவிலக்கானவர்.

கேப்டன்சியில் ஷ்ரேயஸ் அய்யர் அற்புதமாகச் செயல்படுகிறார், தனித்துவமான கேப்டன்சி. பொறுப்பை ஏற்றுக் கொண்டு அணியை முன் நடத்திச் செல்கிறார்.  நெருக்கடி தருணத்தில் பேட்டிங்கில் அசத்துகிறார். அக்சர் படேல், ரபாடா என்று அனைவரும் அபாரம்.

அனைவரும் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டி பவுலர் என்றே முடிவு கட்டினர், ஆனால் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய வெளிப்பாடுதான்.  எவரையும் டெஸ்ட் பவுலர், ஒருநாள் பவுலர், டி20 பவுலர் என்று முத்திரை குத்தக் கூடாது.

டி 20 கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது, ஏனெனில் வெறும் 20 ஓவர்தன, தவறுகள் இழைத்தால் 3 ஓவர்களில் ஆட்டம் மாறிவிடும் , டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் நாம் மீண்டும் ஆட்டத்துக்குள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் டி20யில் வாய்ப்பில்லை, எனவே இந்த 11 வீரர்கள் அபாரமாகச் செயல்படுகின்றனர்.” என்றார் கங்குலி

Sathish Kumar:

This website uses cookies.