சென்னை டீம் வேற லெவல்ல இருக்கு… ஆனா சாம்பியன் பட்டம் இவுங்களுக்கு தான்; டிவில்லியர்ஸ் வித்தியாசமான கணிப்பு
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்க வாய்ப்புள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான மினி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து கொண்டன.
ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் முழுமை பெற்றிருப்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அடுத்த தொடருக்கான ஒவ்வொரு அணிகளின் பலம், பலவீனங்கள் குறித்து தற்போதே விவாதிக்க துவங்கிவிட்டனர்.
அந்தவகையில், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலம் குறித்தும் அடுத்த வருட ஐபிஎல் தொடர் குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணி மிக சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவில்லியர்ஸ் பேசுகையில், “அடுத்த ஐபிஎல் தொடரை ஹைதராபாத் அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். அடுத்த தொடருக்கான ஹைதராபாத் அணி வலுவான அணியாக உள்ளது. டி20 போட்டிகளில் எதையும் இலகுவாக கணித்துவிட முடியாது என்றால், 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் அளவிற்கு தற்போதைய ஹைதராபாத் அணி வலுவானதாக உள்ளது. ஐபிஎல் ஏலத்தை ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மிக சிறப்பாக எதிர்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இரண்டு அணிகளுக்கும் தங்க பதக்கமே கொடுக்கலாம். ஹைதராபாத் அணி டர்வீஸ் ஹெட் மற்றும் . பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என நம்புகிறேன். அதே போன்று இலங்கை அணியின் ஹசரங்காவை ஹைதராபாத் அணி குறைவான விலைக்கு ஏலத்தில் எடுத்தது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. ஹசரங்கா போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய திறமையான வீரர். அடுத்த தொடருக்கான ஹைதராபாத் அணி வலுவானது என்பதில் சந்தேகமே இல்லை” என்று தெரிவித்தார்.