ஹைதராபாத் vs ராஜஸ்தான்; டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத்
ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான ஹைதராபாத் அணியில் இருந்து முகமது நபி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரராகவும் களமிறங்க உள்ளார்.
அதே போல் ராஜஸ்தான் அணியிலும் இஷ் சோதி மற்றும் மஹிபால் லோம்ரார் ஆகிய இரண்டு வீரர்கள் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளானர்.
இந்த போட்டிக்கான ஹைதராபாத் அணி;
ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ், கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், விரக்திமான் சஹா, ரசீத் கான், பாசில் தம்பி, சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா.
இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
அஜிக்னியா ரஹானே, ராகுல் த்ரிபதி, சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்சர், மஹிபால் லோமர், ஜெயதேவ உனாட்கட், தவால் குல்கர்னே, இஷ் சோதி.