நட்சத்திர வீரர் அதிரடி நீக்கம்… இளம் வீரருக்கு இடம்; அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !!

ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இன்று (1-5-22) நடைபெறும் இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. துவக்க வீரர்களாக வழக்கம் போல் உத்தப்பா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட்டே களமிறங்குவார்கள். அதே போல் மிடில் ஆர்டரில் மொய்ன் அலி போட்டியிலும் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது, இதனால் கடந்த இரண்டு போட்டிகளை போன்றே இந்த போட்டியிலும் மிட்செல் சாட்னரே மூன்றாவது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. அதே போல் அம்பத்தி ராயூடு, சிவம் துபே ஆகியோரே மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. வழக்கம் போல் பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோரே இடம்பெறுவார்கள்.

பந்துவீச்சாளர்கள் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய டூவைன் ப்ரெடோரியஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குட்டி மலிங்கா என அழைக்கப்படும் மத்தீஷா பத்ரினாவிற்கு இடம் கிடைக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. இது தவிர முகேஷ் சவுத்ரி மற்றும் மகேஷ் தீக்‌ஷன்னா ஆகியோர் வழக்கம் போல் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ராபின் உத்தப்பா, ருத்துராஜ் கெய்க்வாட், மிட்செல் சாட்னர், அம்பத்தி ராயூடு, சிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, மத்தீஷா பத்ரினா, முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்‌ஷன்னா.

Mohamed:

This website uses cookies.