சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.
புனே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிவம் துபே மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டெவன் கான்வே மற்றும் சிமர்ஜிட் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். டூவைன் பிராவோ போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவர் இந்த போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தோனி தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாட்னர், டுவைன் ப்ரெடோரியஸ், சிமர்ஜித் சிங், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷன்னா.
ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்;
அபிசேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் த்ரிபாட்டி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், சஷான்க் சிங், வாசிங்டன் சுந்தர், மார்கோ ஜென்சன், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக், நடராஜன்.