சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பட்ட அனைத்து அசிங்கத்திற்கும் இவர் தான் முழு காரணம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடர் தோல்விகளுக்கு டேவிட் வார்னரின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக பலம் கொண்ட அணிகளில் ஹைதராபாத் அணியும் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பாரிஸ்டோ என மிக முக்கிய வீரர்களை வைத்துள்ள ஹைதராபாத் அணி, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ரசீத் கான் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களையும் வைத்துள்ளது.

என்னதான் தலைசிறந்த வீரர்களை அணியில் வைத்திருந்தாலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ கடுமையாக சொதப்பி மட்டுமே வருகிறது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி மொத்தம் விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்திலேயே இருந்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடர் தோல்வியால் வேறு வழியின்றி டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய ஹைதராபாத் அணி, கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்தது, கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்பும் ஹைதராபாத் அணி தோல்வியையே சந்தித்தது. இதன்பிறகு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகப்பெரும் அசிங்கத்தில் இருந்தது தப்பித்தது.

இந்தநிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடர் தோல்விகளுக்கு டேவிட் வார்னர் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “சன் ரைசர்ஸ் அணி விளையாடிய விதம் எனக்கே அதிர்சியை கொடுத்தது. என்னை பொறுத்தவரையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைசிறந்த நான்கு அணிகளும் ஒன்றாக தான் நினைத்திருந்தேன். டேவிட் வார்னரின் கேப்டன்சி தான் ஹைதராபாத் அணியின் மிகப்பெரும் பிரச்சனை என்று கருதுகிறேன். டேவிட் வார்னர் பேட்டிங் செய்த விதமும், அணியை வழிநடத்திய விதமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது காலம் கடந்துவிட்டது. ஹைதராபாத் அணி நிர்வாகமும் டேவிட் வார்னரின் கேப்டன்சியில் திருப்தியாக இருந்தது போன்று தெரியவில்லை. அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை, கேதர் ஜாதவை தவிர மிடில் ஆர்டரில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் அனுபவம் இல்லாத வீரர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.