வீடியோ: 0, 0, W, 0, W, 0… 2 விக்கெட்ஸ் மெய்டன்.. முதல் ஓவரில் மொத்த ஆட்டத்தையும் மாற்றிய டிரெண்ட் போல்ட்!

ஆட்டத்தின் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு மெய்டன் செய்து மிரட்டியுள்ளார் டிரெண்ட் போல்ட். அதன் வீடியோவை கீழே காண்போம்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களம் இறங்கினர். வந்த முதல் ஒருவரிலிருந்து ஹைதராபாத் பவுலர்களை வெளுத்து வாங்கி, பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ஜோஸ் பட்லர், 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். 22 பந்துகளுக்கு 54 ரன்கள் அடித்திருந்த போது, ஃபரூக்கி பந்தில் போல்ட் ஆனார். இந்த ஜோடி 5.5 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஜெய்ஸ்வால் 54 ரன்கள், சஞ்சு சாம்சன் 55 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். கடைசியில் ஹெட்மயர் 21 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கும் மேலே எடுத்துச் சென்றார். 20 ஓவர்கள் முடிவில் 23 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே கதிகலங்க வைத்தார் டிரெண்ட் போல்ட். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் அபிஷேக் சர்மாவை போல்ட் செய்தார். ஐந்தாவது பந்தை ராகுல் திரிப்பாதி அடிக்க முயற்சித்தபோது, ஜேசன் ஹோல்டர் தரமான கேட்ச் எடுத்து மிரளவைத்தார். 

போட்டியின் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் மேய்டன் என ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் டிரெண்ட் போல்ட். இந்த வீழ்ச்சியிலிருந்து ஹைதராபாத் அணி இதுவரை மீளவில்லை.

அடுத்து வந்த வீரர்களும் நிலைத்துநிற்காமல் வரிசையாக ஆட்டமிழந்தனர். 16 ஓவர்கள் முடிவில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது ஹைதராபாத்.

போட்டியின் முதல் ஓவரிலேயே டிரெண்ட் போல்ட் வீழ்த்திய இரண்டு விக்கெட் களின் வீடியோவை இங்கே பார்ப்போம். வீடியோ:

Mohamed:

This website uses cookies.