சமீபமாக இலங்கையில் 50 ஓவர்கள் கொண்ட உள்ளூர் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது நேற்று இலங்கை ஆர்மி மற்றும் ப்ளூம் பில்ட் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி அணியின் கேப்டன் திசாரா பெரேரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் 41 ஓவர்களில் இலங்கை ஆர்மி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்தது.
இலங்கை ஆர்மி அணியின் அணியின் கேப்டன் 13 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தினார் அதில் எட்டு சிக்சர்கள் அடங்கும். இவர் 6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்சர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர்.மேலும் அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 400.
பின் 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ப்ளூம் பில்ட் அணி 17 அவர்கள் முடிவடைந்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு வயிறு ர 73 ரன்கள் எடுத்திருந்தது அப்பொழுது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு எந்த ஒரு அணிக்கும் வெற்றியோ தோல்வியோ என்று முடிவு கொடுக்கவில்லை.
6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்சர்கள் அடித்த இலங்கை அணியின் முதல் வீரர் என்ற சாதனையை திசாரா பெரேரா படைத்துள்ளார்.இதனால் அந்த நாட்டு ரசிகர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவரை பாராட்டி கொண்டுள்ளனர்.
இதற்கு முன் இந்த சாதனையை உலகின் தலைசிறந்த வீரர்கள் அடித்துள்ளனர் முதன்முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர் 1968ஆம் ஆண்டு அடித்து சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து ரவிசாஸ்திரி,கீப்ஸ்,யுவராஜ் சிங, கிரான் பொள்ளாட், ஹஸ்ரத்துள்ளா சசாய், மற்றும் லியோ காட்டர் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர் இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் திசாரா பெரேராவும் இந்த சாதனையில் இணைந்துள்ளார்.
2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.