அடுத்த ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு: மீண்டும் அணியில் இடம் பிடித்த சீனியர் வீரர்!

வரும் சனிக்கிழமை தொடங்கி நடைபெற இருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திமுத் கருணாரத்ன இலங்கையை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக புதன்கிழமை இலங்கை கிரிக்கெட் அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் தனுஷ்கா குணதிலகே சேர்க்கப்படவில்லை, அதே நேரத்தில் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட இந்த அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Sri Lanka’s Dimuth Karunaratne during the ICC Cricket World Cup group stage match at Cardiff Wales Stadium. (Photo by Nigel French/PA Images via Getty Images)

முன்னதாக கொழும்பில் நடந்த முதல் போட்டியின் பின்னர், இரு அணிகளும் பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளுக்காக ஹம்பன்டோட்டா மற்றும் பல்லேகேலுக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள காத்திருக்கும் இலங்கை அணியை பொறுத்தவரையில்.,

திமுத் கருணாரத்ன(C), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா, ஷெஹான் ஜெயசூரியா, நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, லட்சூர் சாந்தகன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Sri Lanka’s captain Dimuth Karunaratne (L) and Sri Lanka’s Dhananjaya de Silva celebrate the wicket of England’s Moeen Ali for 16 runs during the 2019 Cricket World Cup group stage match between England and Sri Lanka at Headingley in Leeds, northern England, on June 21, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 22 துவங்கி மார்ச் 4-ஆம் தேதி முடிவடையும் நிலையில், டி20 போட்டிகள் மார்ச் 4 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Sathish Kumar:

This website uses cookies.