பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை அணி ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாடியது.
ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2 – 0 என வெற்றி பெற்றது. டி20 தொடரில் இலங்கை அணி 3 – 0 என வெற்றி பெற்றது.
முதலில் பாகிஸ்தானில் விளையாடச் செல்ல அழைப்பு வந்தது. ஆனால் முன்னணி வீரர்கள் தயங்கினர், அதன்படி 10 முன்னணி வீரர்கள் விளையாடச் செல்லவில்லை.
மீதமுள்ள வீரர்கள் மட்டுமே சென்றநிலையில், தற்போது அவர்கள் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர். இதற்கு காரணம் ஏற்கனவே இலங்கையினர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதே காரணமாகும்.
கதறிய இலங்கை அணி… மீண்டும் பாகிஸ்தான் செல்வது சந்தேகம்!!
பாகிஸ்தான் அரசு இலங்கை வீரர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு கொடுப்பதாக கூறியே அதன்படியான ஒப்பந்தகளில் கையெழுத்திட்டே அழைத்துச் சென்றது, தற்போது அவர்கள் நாடு திரும்பியதுடன், கிரிக்கெட் சங்க வாரியத்தினை அணுகி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து புகார்கள் அளித்துள்ளனர்.
இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் சார்பில் விமான நிலையத்தில் கால் பதித்ததில் இருந்தே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. போதும் போதும் என்று சொல்லுகிற அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பாதுகாப்புக்கான இராணுவ அமைப்பு ரொம்பவே இவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பினை வழங்கியது.
அதாவது இவர்கள் ரோட்டில் பயணிக்கையில் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரர்கள் ஹோட்டல் அல்லது மைதானம் என இரு இடங்களில் மட்டுமே இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் இலங்கை அணி டிசம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவேண்டி உள்ளது. இது ஒரு மாதம் நடைபெற்ய்ம் என்பதால், இலங்கை கிரிக்கெட் போர்டு இதனை மறுபரிசீலனை செய்து வருகிறது.