இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (ஜூலை 27) நடைபெற உள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (ஜூலை 27) நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டால் கடைசி போட்டியில் வாய்ப்பு தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இருவரும் எப்பொழுது இங்கிலாந்து செல்வார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகாததால் இருவரும் இரண்டாவது டி.20 போட்டியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது.
துவக்க வீரர்களாக வழக்கம் போல் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவானே களமிறங்குவார்கள். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கே வாய்ப்பு கிடைக்கும்.
ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் க்ரூணல் பாண்டியா ஆகியோருக்கும், பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி, சாஹல், புவனேஷ்வர் குமார்.