2வது டி20 போட்டியில் களமிறங்கப்போகும் இலங்கை அணி இதுதான்! இதிலும் புதிய மாற்றம்!

இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த தொடரை இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டி20 தொடரில் இந்திய அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாரோ 50 ரன்கள், ஷிகர் தவான் 46 ரன்களும், சஞ்சு சாம்சன் 27 ரன்களும் குவித்தனர். அதற்கு பின்னர் களமிறங்கிய விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில் இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக களம் இறங்கப் போகும் வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

அவிஷ்கா பெர்னாண்டோ

முதல் டி20 போட்டியில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இவர் விளையாடினார். முதல் டி20 போட்டியில் இவர் சற்று அதிரடியாக விளையாடி 26 ரன்கள் குவித்தார். அதே சமயம் ஒருநாள் தொடரில் இரண்டு அரை சதங்கள் குவித்துள்ளார். நல்ல பார்மில் இருக்கும் இவர் நிச்சயமாக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மினோத் பானுகா

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனால் இவர் முதல் டி20 போட்டியில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் இலங்கை அணியின் கேப்டன் டிமுத் கருணாரத்னே அணியில் இல்லாத காரணத்தினால் அவரது வேலையை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆரம்பத்தில் பெர்னாண்டோவுக்கு சற்று ஈடுகொடுத்து இவர் விளையாடுவதால் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

பானுகா ராஜபக்சே

முதல் டி20 போட்டியில் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் இதற்கு முன்பு நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கி விளையாடினார். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர் 65 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு துணையாக நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே நிச்சயமாக இந்த ஆட்டத்தில் இவரும் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

தனஞ்செய டீ சில்வா

3-வது இடத்தில் களம் இறங்கி கடந்த போட்டியில் விளையாடினார். ஆனால் கடந்த போட்டியில் இவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது இடத்தில் ராஜபக்சே இன்று விளையாடுவார், அதே நேரத்தில் இவர் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

சரித் அசலங்கா

முதல் டி20 போட்டியில் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக முதல் ஓவர்களில் இவர் மிக சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார். எனவே நிச்சயமாக இன்றைய ஆட்டத்தில் இவர் களமிறங்குவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

தசுன் ஷனங்கா

இலங்கையின் கேப்டனாக விளையாடி வரும் இவர் ஒருநாள் தொடரில் அவ்வளவாக இவர் விளையாடவில்லை. முதல் டி20 போட்டியிலும் இவர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை வெறும் 16 ரன்கள் மட்டுமே குவித்தார். இருப்பினும் கேப்டனாக ஏதோ இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

வணின்டு ஹசரங்கா

முதல் டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசிய வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சம்சன் விக்கெட்டுகள் ஆகும். எனவே நிச்சயமாக இவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் அதில் எந்தவித சந்தேகமும்

கிடையாது.

சமிகா கருணரத்னே

ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வரும் இவர் முதல் டி20 போட்டியில் மூன்று வருடங்கள் மட்டுமே குவித்தார் இருப்பினும் பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். எனவே இன்றைய ஆட்டத்தில் இவர் ஆல்ரவுண்டர் வீரர் என்கிற அடிப்படையில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

இசுரு உடானா

இவர் முதல் டி-20 ஆட்டத்தில் 6 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றுவது இல்லை. இருப்பினும் தற்போது உள்ள இலங்கை அணியில் சற்று அனுபவம் வாய்ந்த இடதுகை பந்துவீச்சாளராக இவர் கருதப்படுவதால் நிச்சயமாக என்ற இடத்தில் விளையாடுவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

துஷ்மந்த சமீரா

முதல் டி20 போட்டியில் இவர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் முதல் பந்தில் அதிரடி வீரர் பிரித்திவி ஷாவை 0 ரன்னுக்கு அவுட்டாக்கி அசத்தினார். எனவே இன்றைய ஆட்டத்தில் இவர் நிச்சயமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பிரவீன் ஜெயவிக்ரமா

முதல் டி-20 ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி அதிகமாக 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இருப்பினும் இலங்கை அணி வெற்றி பெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணி வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதனடிப்படையில் இவருக்கு இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Prabhu Soundar:

This website uses cookies.