இலங்கையில் அதிரடியாக விளையாட்பபோகும் இந்திய வீரர் இவர்தான்! இர்பான் பதான் பேச்சு!

2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாத அணியில் இருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டார். அதற்கு பின்னர் இந்திய அணியில் அவர் மறுபடியும் இடம்பெற்ற விளையாடுவாரா அல்லது விளையாட மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. கடும் விமர்சனங்கள் அவர் மீது எழுந்த நிலையில், அவர் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் 8 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 827 ரன்கள் குவித்தார். மேலும் இந்த தொடர் முழுவதும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 138.29 ஆக இருந்தது.அதே அதிரடி ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும் பிருத்வி ஷா வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 8 போட்டிகளில் 308 ரன்கள் அவர் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 166.48 ஆக உள்ளது. அதன் மீது எழுந்த விமர்சனங்கள் அனைத்தையும் தற்போது தவிடு பொடி ஆக்கும் வண்ணம் அவர் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இலங்கையில் பிருத்வி ஷா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவார்

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பிருத்வி ஷா குறித்து ஒரு சில விஷயங்களை தற்போது பேசி இருக்கிறார்.பிருத்வி ஷா கடந்த ஆண்டு இறுதியில் மிகவும் மோசமான பார்மில் இருந்தார். ஆனால் அதற்கு பின்னர் விஜய் ஹசாரே தொடர் ஐபிஎல் தொடர் என அடுத்தடுத்து இரண்டு தொடரிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

அவருடைய ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் வெளிப்படையாக தெரிகிறது. தன் மீது எழுந்த விமர்சனங்கள் அனைத்தையும், தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் சுக்குநூறாக்கி இருக்கிறார்.

அவரால் விஜய் ஹசாரே டிராபி தொடர் அதற்கு பின்னர் நடந்த ஐபிஎல் தொடர் என இரண்டு தொடரிலும் அடுத்து அடுத்து தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க முடியும் என்றால், நிச்சயமாக தற்பொழுது இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் நிச்சயமாக அதனுடைய அதே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என இர்பான் பதான் தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 15ஆம்தேதி நடக்க இருந்த நிலையில், தற்பொழுது முதல் டி20 போட்டி 17ஆம் தேதி நடக்க உள்ளது இந்திய நேர அளவில் 2.30 மணிக்கு இந்த போட்டி இலங்கையிலுள்ள கொழும்புவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.