இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம் தான்… இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அயர்லாந்து !!

இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம் தான்… இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அயர்லாந்து

இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 15வது போட்டியான இன்றைய போட்டியில் இலங்கை அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான அயர்லாந்து அணி தனது ஆடும் லெனில் எவ்வித மாற்றமும் செய்யாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான அயர்லாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. நட்சத்திர வீரரான பதும் நிஷான்காவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குஷால் மெண்டீஸ், டி சில்வா போன்ற வழக்கமான அனைத்து வீரர்களும் இலங்கை அணியின் ஆடும் லெவனில் இடமெப்ற்றுள்ளனர்.

இலங்கை அணியின் ஆடும் லெவன்;

குஷால் மெண்டிஸ், டி சில்வா, சாரித் அஸ்லன்கா, ஆசென் பந்தரா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா, வானிது ஹசரங்கா, சமீகா கருணாரத்னே, மகேஷ் தீக்‌ஷன்னா, பினுரா பெர்னாண்டோ, லஹிரு குமாரா.

அயர்லாந்து அணியின் ஆடும் லெவன்;

பவுல் ஸ்டிர்லிங், ஆண்ட்ரியூ பல்பிர்னே, லார்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் சாம்பர், ஜார்ஜ் டக்ரெல், காரெத் டெனேலி, மார்க் அடைர், சிமி சிங், பாரி மெக்ராத், லிட்டில்.

Mohamed:

This website uses cookies.