சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்..? இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை அணி !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இரு அணிகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் ஷாதப் கான் மற்றும் நசீம் ஷா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் உஸ்மான் காதிர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் ஆடும் லெவன்;

பதும் நிஷான்கா, குஷால் மெண்டீஸ், தனுஷ்கா குணதிலகா, டி சில்வா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா, வானிது ஹசரங்கா, சம்மீகா கருணாரத்னே, பிரமோத் மடூசன், மகேஷ் தீக்‌ஷன்னா, தில்சன் மடுசனாகா.

பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃபகர் ஜமான், இஃப்திகார் அஹமத், குஸ்தில் ஷா, முகமது நவாஸ், ஷாதப் கான், ஆசிஃப் அலி, ஹரீஸ் ரவூஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

Mohamed:

This website uses cookies.