30 ஆண்டுகளில் இதுவே முதல் முறை… பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றி மாற்றி எழுதியது இலங்கை !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இலங்கை அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஓருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

 

கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அஸ்லன்கா 110 ரன்களும், டி சில்வா 60 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, அந்த அணிக்கு துவக்க வீரரான டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இலங்கை அணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

Mohamed:

This website uses cookies.