இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. #Chandimal
இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட், 4 ஒருநாள் போட்டியில் விளையாட தடை
இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் சண்டிமல் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் மாற்றுப் பந்தை பயன்படுத்த நடுவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, அணி மானேஜர் அசாங்கா குருசிங்கா பீல்டிங் செய்ய மறுத்தனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்ட நேரம் பாதித்தது.
இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சண்டிமல் அப்பீல் செய்திருந்தார். இந்த அப்பீல் விசாரணை முடிவில் மூன்று பேருக்கும் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டு ஒரு போட்டியில் விளையாடத் தடை, 100 சதவீத ஊதியம் அபராதம் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே தனது வீரர்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் அமைப்பு தெரிவித்திருந்தது.
இதனால் சண்டிமல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாட முடியாது.
இந்நிலையில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே மற்றும் இலங்கை அணி மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.
எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக காலே மற்றும் கொழும்புவில் நடைபெறும் இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் அதே அணிக்கு எதிராக தம்பூலா மற்றும் கண்டியில் நடக்கும் 4 ஒருநாள் போட்டிகளில் இவர்கள் 3 பேரும் பங்கேற்காது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 செப்டம்பர் முதல் தினேஷ் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்படுவது இது 2-ஆவது முறையாகும்.