இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தற்போது விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஆந்திர தேசத்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கேரளா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுழற் பந்து வீசி விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட் வீழ்த்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்த் பெரிதாக ஏதும் சாதித்துவிடவில்லை. 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து இருக்கிறார் ஆனால் அதிகமாக ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபிப்பதற்கு வாய்ப்பாக அமையும் இந்த தொடரானது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நவம்பர் மாதங்களிலேயே நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக நடத்தப்பட்டதால், இந்த வருடத்திற்கான சையத் முஸ்டாக் அலி தொடர் நடத்தப்படாமல் இந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டு, தற்போது தடை காலத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தற்போது சையத் முஸ்தாக் அலி தொடரில் கேரள அணிக்காக விளையாடி வருகிறார்.