வெஸ்ட் இண்டீஸ் இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதை இலங்கை அணி மறுத்தது. இதனால், விசாரணை நடத்தப்பட்டது, இதில் சேதப்படுத்தியது உறுதியாக இலங்கை கேப்டன், பயிற்சியாளர், மேலாளர் மூவருக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தது ஐசிசி நிர்வாகம்.
இலங்கை வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியா மைதானத்தில் நடந்தது. இதில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் நாள் போட்டி முடிந்தவுடன், அம்பயர் அலீம் தார், இயன் கவுட் இருவரும் இது குறித்து இலங்கை கேப்டன் சந்திமாலிடம் விசாரித்தனர். மேலும், 3ம் நாள் ஆட்டம் வேறொரு பந்தில் தான் தொடங்கும். இதே பந்து உபயோகிக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.
இதற்கு சற்றும் ஒப்புக்கொள்ளமல், முடியவே முடியாது அதே பந்தை தான் தொடர வேண்டும் எனவும் தெரிவித்தனர் இலங்கை அணியினர். மேலும், 3 ம் நாள் ஆட்டம் துவங்கும் பொழுது இலங்கை வீரர்கள் அறையில் இருந்து வெளிவரவே இல்லை. நடுவர் ஜாவகல் ஸ்ரீநாத் சமாதான படுத்திய பிறகு தான் வெளிவர சம்மதித்தனர். இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைப்பட்டது.
ஆனால், பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. எந்த வீரரும் எந்தவிதமான தவற்றிலும் ஈடுபடவில்லை. ஆதாரமில்லாத எந்தக் குற்றச்சாட்டையும் கூறினால், வீரர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என இலங்கை நிர்வாகம் அறிவித்தது.
பந்தை சேதப்படுத்தியது உறுதியாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 5 நாள் முடிவில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஆனால் பந்தை சேதப்படுத்தியது உறுதியாகவே ஐசிசி நிர்வாகம் இலங்கை அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கா, பயிற்சியாளர் சந்திகா ஹதுராசிங்கா, கேப்டன் சந்திமால் ஆகியோருக்கு விசாரணை க்கு அழைத்தது.
இதில் மூவருக்கும் ஒரு போட்டிகள் தடையும், 100 சதவீதம் சம்பளம் அபராதம் எனவும் அறிவித்தது. மேலும், 2 முதல் 4 புள்ளிகள் டெஸ்ட் போட்டியிலும், 4 முதல் 8 புள்ளிகள் டி20 ஒருநாள் போட்டிகளிலும் குறைக்கப்படும் எனவும் கூறியது. இதற்கு முட்டுக்கட்டை கொடுத்துக்கொண்டு இருந்த இலங்கை வாரியத்திற்கு தற்போது பெருத்த அவமானமாக ஆனது.