முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! மீண்டும் புது முக வீரர்கள்!

 

ஷிகர் தவன் தலைமையில் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடி முடித்து உள்ளது. இந்த தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நடந்து முடிந்தவுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இன்று முதல் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் களமிறங்க போகும் இலங்கை வீரர்கள் யார் என்ற தற்போது பார்ப்போம்.

அவிஷ்க்கா பெர்னாண்டோ

நிச்சயமாக இவர் இன்று நடைபெற இருக்கும் டி20 போட்டியில் களம் இறங்குவார் என்று அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளில் 159 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 76 ரன்கள் குவித்து இலங்கை அணியை வெற்றி பெறச் செய்தார். எனவே இன்றைய டி20 போட்டியில் நிச்சயமாக இவர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மினோத் பானுகா

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனால் இவர் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடினார். முதல் போட்டியில் 27 ரன்களும் இரண்டாவது போட்டியில் 36 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஓபனிங் வீரர் பெர்னாண்டோவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இவர் துணை நின்று விளையாடியது குறிப்பிடத்தக்கது. எனவே இவரும் இன்றைய டி20 போட்டியில் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

பானுகா ராஜபக்ஷ

முதல் ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் குவித்தார். குறிப்பாக இவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 65 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு துணை நின்றார். நல்ல டச்சில் இருக்கும் இவர் நிச்சயமாக என்றயடி 20 போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனஞ்செய டி சில்வா

நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இவர் அவ்வளவு சிறப்பாக மூன்று போட்டிகளிலும் மொத்தமாக 43 ரன்கள் மட்டுமே இவர் குவித்தார். பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வரும் இவர் இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரித் அசலங்கா

இடது கை பேட்ஸ்மேனான இவர் நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி உள்ளார். மொத்தமாக மூன்று போட்டிகளில் 127 ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறார். நல்ல பார்மில் இருக்கும் இவர் நிச்சயமாக இன்றைய டி20 போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

தசுன் ஷனகா

மூன்று போட்டிகளிலும் இவர் மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறார். பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பாக இவர் விளையாடவில்லை அதே சமயம் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இவர் கைப்பற்றினார். டிமுத் கருனரத்னே அணிகள் இல்லாத காரணத்தினால் இவர் இலங்கை அணியை தலைமை தாங்கிய விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய டி20 போட்டியில் இவர் இடம் பிடிப்பார் என அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரமேஷ் மென்டிஸ்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டுமே இவர் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். ஏழாவது இடத்தில் களம் இறங்கி 18 பந்துகளில் முக்கியமாக 15 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றியை இறுதி நேரத்தில் இவர் உறுதிப்படுத்தினார். சிக்கலான நேரத்தில் வந்து நிதானமாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்த காரணத்தினால் நிச்சயமாக இன்று 20 போட்டியில் இவர் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

சமிகா கருனரத்னே

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 43 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்களும் குவித்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி தன் திறமையை இவர் நிரூபித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சில் இவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர் நிச்சயமாக இன்றைய டி20 போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

அகில தனஞ்சய

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தினறடித்தார். இவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. நல்ல பார்மில் இருக்கும் இவர் இன்றைய டி20 போட்டியில் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பிரவீன் ஜெயவிக்ராமா

இவரும் இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசிய 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நல்ல பார்மில் இருக்கும் இவரும் நிச்சயமாக இன்றைய முதல் டி20 போட்டியில் களமிறங்கிய விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

துஷ்மந்த சமீரா

முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் எந்த விக்கெட்டுகளையும் கைப்பற்றினர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர் ஷிகர் தவான் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். எனவே நல்ல இடத்தில் இருக்கும் இவர் நிச்சயமாக இன்றைய முதல் டி20 போட்டியில் களமிறங்கி விளையாடுவார் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது .

Prabhu Soundar:

This website uses cookies.