வீடியோ : சக அணி வீரரின் மூஞ்சியிலேயே பளாரென்று அடித்த இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல !

வீடியோ : சக அணி வீரர்களின் மூஞ்சியிலேயே பளாரென்று அடித்த இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல !

இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட இங்கிலாந்து அணி வெற்றிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

காலேயில் நடைபெறும் இந்த ஆட்டத்தின் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் அந்த அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஜானி பேர்ஸ்டோவ் 11, டேன் லாரன்ஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

முன்னதாக ஜாக் கிராவ்லி 8, டாம் சிப்லே 2, கேப்டன் ஜோ ரூட் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். எனினும் ஆட்டத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை இங்கிலாந்து 36 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டும் எனத் தெரிகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 421 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, சனிக்கிழமை முடிவில் 61 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை லாஹிரு திரிமணே, லசித் எம்புல்தெனியா கூட்டணி தொடங்கியது. இதில் திரிமணே 12 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் சேர்த்து வெளியேற, லசித் டக் அவுட்டாகியிருந்தாா். பின்னா் ஆடியவர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்க்க, கேப்டன் தினேஷ் சண்டிமல் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

நிரோஷன் டிக்வெல்லா 1 பவுண்டரியுடன் 29, டாசன் ஷனகா 4, டி சில்வா 2 பவுண்டரிகளுடன் 12, தில்ருவன் பெரேரா 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்தனா். இவ்வாறாக 136.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்தது இலங்கை. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5, டாம் பெஸ் 3, சாம் கரன் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை வீரர் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல விக்கெட் வீழ்த்திய உடன் தனது சக அணி வீரர்களுடன் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது தனது கையை காட்டிவிட்டு தனது வீரரின் கையில் அடிப்பதற்கு பதிலாக அவரது மூஞ்சியில் பளார் என்று ஒரு அடி அடித்து விட்டார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Prabhu Soundar:

This website uses cookies.