பதற்ற நிலையிலும் பாகிஸ்தான் சென்று விளையாடும் ஆசிய அணி! வீரர்களுக்கு என்ன ஆகும்?

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சுடு நடத்தினார்கள். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர்.

அதன்பின் எந்தவொரு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. இறுதியில் ஜிம்பாப்வே அணி கடும் பாதுகாப்புகளுக்கு இடையில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த நாட்டில் போட்டியை நடத்த தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது. இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் சங்கம் சம்மதித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளும் தலா மூன்று 50 ஓவர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. போட்டிகள் கராச்சி மற்றும் லாகூர் நகரில் நடக்க இருக்கிறது.

ஏற்கனவே, இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. லாகூர் மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பஸ்சில் சென்றபோது எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் வீரர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை வீரர்கள் காயத்தோடு அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினர்.

இதனால் அத்துடன் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பினர். அதில் இருந்து முக்கியமான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 10 வருடமாக எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. ஆனால் எந்த அணியின் மனதையும் மாற்றமுடியவில்லை.

இந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 போட்டிகளை பாகிஸ்தான் மணணில் நடத்தி, பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்பான வகையில் கிரிக்கெட் விளையாடலாம் என்று பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அக்டோபர் மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்தத் தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற வேண்டும் என விரும்புகிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் கீழ் வருகிறது.

சமீபத்தில் லண்டனில் ஐசிசி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய இலங்கை கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.