ஸ்ரீசாந்தின் புதிய அவதாரம் – வீடியோ

 

கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்த், தற்போது பாடிபில்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். விக்கெட் எடுத்தால் டான்ஸ் ஆடும் ஸ்டைலை ப்ராவோவுக்கு முன்னரே கடைபிடித்தவர் இவர். மிக இளம் வயதிலேயே உச்சத்தையும், வீழ்ச்சியையும் சந்தித்தவர் இவர்தான்.

அன்றைய காலகட்டத்தில் பற்பல சர்ச்சையில் சிக்கி, மாத மாதம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியும் வந்தார். ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் சைமண்ட்சை வம்புக்கு இழுத்தது முதல் ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது வரை மிகவும் ஹாட்-டாபிக்காக ஓடியது ஸ்ரீசாந்த் சர்ச்சைகள்.

ஸ்ரீசாந்த் இந்தியக் கிரிக்கெட்டில் இளம்வயதில் உச்சத்தைத் தொட்டவர், அதே வேகத்தில் சரிவையும் சந்தித்தவர். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராகவே இருந்தார். சர்ச்சைக்குச் சொந்தக்காரராகவும் வலம் வந்துகொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சைமண்ட்ஸை வம்புக்கு இழுத்தது. ஐ.பி.எல் போட்டியில் ஹர்பஜன் சிங்கிடம் அடிவாங்கியது எனப் பரபரப்பாகப் பேசப்பட்டார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது சூதாட்டப் புகாரில் சிக்கினார். இதையடுத்து  கிரிக்கெட் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. `தடையிலிருந்து மீண்டும் வருவேன். நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்’ என்றார்.

தடையால் தன் வாழ்க்கை முடிந்துபோனதாக அவர் என்னவில்லை. பிற துறையில் தனது கவனத்தைத் திருப்பினார். தற்போது பாடி பில்டிங்கில் ஆர்வம் செலுத்தி வரும் ஸ்ரீசாந்த், தன் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். இதுதொடர்பாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்ரீசாந்த்

பாடி பில்டிங்:


மேட்ச் பிக்ஸிங் வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்க, அவர் கிரிக்கெட் கனவு பலிக்காத நிலையில், அவர் தற்போது ஜிம்மே கதியாக கிடக்கிறார் போல. அவர் பாகுபலி ஹீரோக்களை விட கட்டுமஸ்தானமாக உடம்பை ஏற்றி வைத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் சிலர் ஹர்பஜனை வம்புக்கு இழுந்துள்ளனர். ஸ்ரீசாந்த்திடம் தற்போது நெருங்குவாரா ஹர்பஜன் எனக் கமென்ட் செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு அவர் நடிப்பில் டீம் 5 ( Team 5) என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ஸ்ரீசாந்த் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறாரோ என்னவோ?

 

Editor:

This website uses cookies.