யுவி பெயரில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயரில் கிரிகெட் ஸ்டேடியம் வைப்பது தற்போது பிபலமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பெயரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரைத் தாண்டி சச்சின் இல்லை. கங்குலி இல்லை ட்ராவிட்டும் இல்லை, அதிரடி வீரர் ஆறு சிக்சர் மன்னன் யுவராஜ் சிங்கின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது.

அந்த மைதானம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உயிரி தொழில் நுட்பப் பல்கலைக்கழகமான ஷூலினி பல்கலைக்கழகம் அவருக்கு இந்த மரியாதை செலுத்தியுள்ளது.

ஸ்டேடியத்தை இன்று யுவ்ராஜ் சிங்க் திறந்து வைத்தார். இந்த புகைப்படத்தை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். பின்னர் அந்த புகைப்படத்தை சில மணி நேரம் கழித்து நீக்கிவிட்டார். அதற்க்கான காரணம் தெரியவில்லை.

 

அந்த ஸ்டேடியத்தின் பெயர் ‘யுவராஜ் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.ஷூலினி பல்கலைக்கழகம் இமாச்சல்ப் பிரதேசத்தில் உள்ள பஜோல் மாவட்டத்தின் சோல்ன் நகரில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் யுவ்ராஜ் சிங் இந்த பலகலைகழகத்தைப் பாராட்டி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். யுவ்ராஜ் சிங் ‘யுவிகேன்’ என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிறூவனம் உடல் பாதுகாப்ப்பு மற்றும் ஏழை மக்களின் ஆரோக்யத்தை முன்னேற்றும் வகையில் செயல்படுகிறது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு  உயிரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான ஷூலினி பலகலைக்கழகம் பல்வேறு வகையில் புற்றுநோய் சம்மந்தமான விழிப்புணர்விற்க்கு உதவி செய்தது.

இதனைப் பார்ராட்டியே அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். தற்போது அதே பல்கலைகழக்கத்தில் யுவராஜி சிங்கின் பெயரில் ஒரு ஸ்டேடியம் கட்டமைத்து திறக்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சைகுள்ளாகும் விசயமாகக் கூட இருக்கலாம். நல்ல ஆரோக்யமான ஒரு நடவடிக்கை என்றால் அனைத்தும் நலமே. ஏனெனில் இது கொடுக்கல் வாங்கள் போல் உள்ளது அதன் காரணமாகவே சர்ச்சைக் கருத்துக்களும், கேள்விகளும் முன்வைக்கப் படுகின்றது.

யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த படத்தை பதிவேற்றிய சில மணி நேரங்களில் நீக்கிவிட்டதும் இங்கு சொல்லப்பட வேண்டிய விசயமாகும்.

 

Editor:

This website uses cookies.