காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20 கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இவர் இடம் பிடித்திருந்த ரிலையன்ஸ்-1 அணி பாங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்கொண்டிருந்தது.
இதில் 25 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா நான்கு சிக்சர்களுடன் 38 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியால் ரிலையன்ஸ் 1 அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் பந்து வீசும்போது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இதனால் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய ரிலையன்ஸ் 1 அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2020 ஐபிஎல் தொடரின் பிளே – ஆஃப் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் சில ஐபிஎல் அணிகள் முறையிட்டுள்ளன.
ஆனால், அது பல சிக்கலை ஏற்படுத்தும் என கருதும் பிசிசிஐ, கேட்டும், கேட்காமல் அந்த கோரிக்கையை தவிர்த்து வருகிறது.
கடந்த ஓராண்டாகவே ஐபிஎல் அணிகள், ஐபிஎல் தொடரை தவிர்த்து தங்கள் அணிகள் வெளிநாடுகளில் டி20 போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.
தற்போது ஐபிஎல் தொடர் ஆண்டுக்கு சுமார் 50 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் போட்டிகள் இல்லை என்றாலும், ஐபிஎல் அணிகள் அடுத்த ஆண்டு வரை வருமானத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க, மற்ற நாடுகளில் ஐபிஎல் தொடர் தவிர்த்து சில போட்டிகளில் ஆட அனுமதி அளித்தால், அது ஐபிஎல்-லுக்கு உலக அளவில் சந்தையை ஏற்படுத்தும் என சில அணிகள் பிசிசிஐ-யிடம் கூறி வருகின்றன. இது குறித்து பிசிசிஐ முந்தைய கூட்டத்தில் விவாதித்தாலும், அது குறித்து எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரின் பிளே – ஆஃப் போட்டிக்கான அட்டவணை மட்டும் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த போட்டிகளை அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என சில ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதன் மூலம், ஐபிஎல் அணிகளின் வருமானம் உயர்வதுடன், பிசிசிஐக்கும் அதில் 20 சதவீதம் பங்கு கிடைக்கும். எனவே, பிசிசிஐ இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அந்த ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள், ஐபிஎல் தொடர்பான கூட்டத்தில் பேசி இருக்கின்றனர்.வ்