ஐ.பி.எல் தொடரில் அதிக ‘டாட்’பால் வீசியுள்ள டாப்-10 பந்து வீச்சாளர்கள்

ஐ.பி.எல் தொடரில் அதிக ‘டாட்’பால் வீசியுள்ள டாப்-10 பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல் டி.20-2018 தொடர் இன்று  தொடங்வுள்ளது . ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோத உள்ளன.மேலும் 11வது ஐ.பி.எல். தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். தொடரின் இறுதி போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி எது என்பதை அறிய ஒவ்வொரு  பக்கமாக க்ளிக் செய்து பார்க்கவும்.

1.குஜராத் லயன்ஸ்

குஜராத் லயன்ஸ் முன்னணி வீரர் பிரவீன் குமார், பந்துவீச்சில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டவர் .இவர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 1075 டாட்  பந்துகளை வீசிஉள்ளார்.

2.மும்பை இந்தியன்ஸ்;

மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கா இரண்டாவது இடத்தில் உள்ளார்.லசித் மலிங்கா பிரபலமான ட்வென்டி 20 லீக்கில் 1060 டாட் பந்துகளை வீசி உள்ளார்.

3.சூப்பர் கிங்ஸ் சென்னை;

ஹர்பஜன் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டியில் மற்றும் ஐபிஎலில் அவரது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. 1,060 டாட் பந்துகளை வீசி உள்ளார்.

4 .குஜராத் லயன்ஸ்;

குஜராத் லயன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருக்கும் டேல் ஸ்டெயின்.இந்திய பிரீமியர் லீக்கின்  உரிமையாளர்களால் வெளியிடப்பட்ட மிகப்பெரிய பெயர்களில் இருக்கிறார்.  இவர் 978 டாட் பந்துகளை வீசி நான்காவது இடத்தில் உள்ளார்.

  1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்;

அமித் மிஸ்ரா 953 டாட் பந்துகளை வீசி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகவும் அதிக விக்கெட் எடுத்தவரில் ஒருவராக உள்ளார்.மிஸ்ரா ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் இரண்டு ஹாட்ரிக்ஸ்  எடுத்துள்ளார்.

6.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பியூஷ் சாவ்லா, வலது கை சுழற்பந்து வீச்சாளர்.டாப்-10 பந்து வீச்சாளர்களில் 910 டாட் பந்துகளை வீசி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.

7.கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்திய அணி வீரர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஸ்வின்  891 டாட் பந்துகளை வீசி ஏழாவது இடத்தில் உள்ளார்.

8.டெல்லி டேர்டெவில்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் பின்னால் மிகவும் வெற்றிகரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 873 டாட் பந்துகளை வீசி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

9.குஜராத் லயன்ஸ்;

இர்பான் பதான் டாட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். இதுவரை 835 டாட் பந்துகளை வீசியுள்ளார் .

10.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்;

புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் .இதுவரை 832 டாட் பந்துகளை வீசியுள்ளார்.

Mahendran Arumugam:

This website uses cookies.