டி20 போட்டியில் இந்திய வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கு பின்வரும் புள்ளி விவரங்கள் பதில் அளிக்கின்றன.
கடந்த சில வருடங்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என்பதை சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இருவரும் தங்களை நிரூபிக்கும் வண்ணம் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரில் விராட் கோலி அபாரமாக ஆடினார். அதேநேரம் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்நிலையில் 20 ஓவர் போட்டியிலும் இருவரில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதம் தற்போது பரவலாக இருந்து வருகிறது.
டி20 போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அவரது அமைச்சரவை சகாக்கள் இருவரும் மாறி மாறி அடைந்து வருகின்றனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்ன ரோகித் சர்மா டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வராக இருந்தார் ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்து வெளியேறினார் அதேநேரம் கேப்டன் விராட்கோலி அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றார் 72 ரன்கள் அடித்த இவர் டி20 போட்டியில் மீண்டும் அதிகாரம் கொடுத்தது பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
விராட் கோலி 2441 ரன்களுடன் முதல் இடத்திலும் ரோகித் சர்மா 2434 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையே 7 ரன்கள் மட்டுமே வித்தியாசம் என்பதால் அதை மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா அடுத்து முதல் இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் விராட் கோலியை ஓட ரோகித் சர்மா 26 போட்டிகள் அதிகமா ஆடியிருக்கிறார். மேலும், ரோஹித் சர்மா 17 அரைசதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். ஆனால் விராட் கோலி 22 அரை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா 4 சதங்கள் அடித்து இருக்கிறார் அதனால் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை.
விராட் கோலி 50.85 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். ஆனால் ரோஹித் சர்மா 32.45 என்ற குறைவான சராசரியை கொண்டுள்ளார்.
தற்போது புள்ளி விவரங்களின் அடிப்படையில் விராட் கோலி ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றிருக்கலாம். இருப்பினும், கடந்த இரண்டு வருடங்களில் ரோஹித் சர்மாவின் ருத்தர தாண்டவத்தை அனைத்து இந்திய ரசிகர்களும் கண்டிருப்பார்கள்.