இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் தக்கவைத்துக் கொண்டது.
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 301 ரன்கள் சே ர்த்தது.
இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால்,197 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம், ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி காரணமாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது நீங்கள் இன்னும் கேப்டன் பதவிக்கு தகுதியுடன் தான் இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜோ ரூட்..
‘கண்டிப்பாக,,’ நான் அதற்கு தகுதியுடன் தான் இருக்கிறேன். இந்த அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும். மீண்டும் அந்த இடத்திற்கு வந்து கடுமையாக உழைத்து அணியை வெற்றி பெறச் செய்ய காத்திருக்கிறேன். இது தற்போது என் கையில் இருக்கிறது.
அணியை கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எத்தனை போட்டிகள் வெல்ல முடியுமோ அத்தனை போட்டியில் வெல்ல காத்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பொருத்தவரை ஆஷஸ் தொடரில் தோல்வி என்றால் அதுவும், சொந்த மண்ணில் தோற்றுவிட்டால் கண்டிப்பாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், ஜோஸ் பட்லர் அவருக்கு பதிலாக கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. பட்லர் பார் அவுட்டில் இருப்பதால் அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என செய்திகள் உலா வருகின்றன..