உலகக்கோப்பையில் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை; ஸ்டீபன் பிளமிங் சொல்கிறார்
2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. இரண்டு உலகக் கோப்பையை (2007 இருபது ஓவர், 2011 ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
37 வயதான டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அந்த இரு நிலைகளிலும் விளையாடி வந்தார். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி நீக்கப்பட்டார்.
இதனால் அவரது எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை டோனி இனி இடம் பெறுவது கேள்விக்குறியே. ஒருநாள் போட்டிகளிள் ஆட்டத்திறனை பொறுத்து அவரது எதிர்காலம் இருக்கிறது.
இந்த நிலையில் டோனி வலிமையானவர், 2019 உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு அவர் தேவையானவர் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டோனி இந்திய அணியில் இடம்பெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவரது வலிமையை கணிக்க இயலாது. கடந்த ஐபிஎல் போட்டியில் டோனியின் பேட்டிங்கை பார்த்தால் இது தெரியும்.
ஒருநாள் போட்டிகளில் போன்று டோனி நம்பிக்கையுடன் ஆட வேண்டும். அவர் மிகப்பெரிய கட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாக நினைக்கிறேன். 2019 உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெறுவார்” என்றார்.
டோனி இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் விளையாடி 255 ரன்களே எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 67.36 ஆகும்.
டோனி இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் விளையாடி 255 ரன்களே எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 67.36 ஆகும்.