வங்கதேச ப்ரீமியர் லீக்கில் விளையாடுகிறார் ஸ்டீவ் ஸ்மித் !!

வங்கதேச ப்ரீமியர் லீக்கில் விளையாடுகிறார் ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியால் தடை செய்யப்பட்டிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் வங்கதேச ப்ரீமியர் லீக்கில் கோமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்களின் சங்கங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் முதன்மையான தொடரில் விளையாட தடைவித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால் தற்போது புகழ்பெற்று வரும் டி20 லீக்கில் களம் இறங்க முடிவு செய்தார்.

அதன்படி கனடா மற்றும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் மாலிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. இதனால் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘‘நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிக்குப்பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்’’ என்று அந்த அணி தெரிவித்துள்ளது.

மற்றொரு வீரரான டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மீது அதிருப்தி;

தன் மீதான தடையை நீக்காத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மீது ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தியில் இருக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “ரிக்கெட் வாரியம் தன் மீதான தடையை நீக்கும் என ஸ்டீவ் ஸ்மித் நினைத்திருப்பார், ஆனால் முடிவு அவருக்கு சாதகமாக அமையாததால் நிச்சயம் விரக்தியடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் விரைவில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.