ஜோஃப்ரா ஆர்ச்சாரின் காட்டுத்தனமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் சிக்கல்
ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் அடி வாங்கிய ஸ்மித் நிலைகுலைந்தார், பிறகு வந்து ஆடினார், 92 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார், ஆனால் நேற்று இரவு நன்றாகத் தூங்கியதாகக் கூறப்படும் அவருக்கு காலையில் லேசான தலைவலி மற்றும் பலவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கன்கஷன் தாமதமாக அவருக்குஏற்பட்டிருக்கலாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கருதுவதால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி இன்றோடு நிறைவடைந்தாலும் அவர் அதிலிருந்து விலகினார். மேலும் ஹெடிங்லேயில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டிக்கும் ஸ்மித் ஆடுவது சந்தேகம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கன்கஷன் விதிமுறைகளின் கீழ் முதல் முறையாக லபுஷேன் ஸ்மித்துக்கு மாற்று வீரராக இந்த டெஸ்ட்டிலும் ஆடலாம்.
கிர்க்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பின் படி, “ஸ்மித்துக்கு தலைவலி, லேசான தலைசுற்றல், உணர்வு மந்தம், அயர்ச்சி ஆகியவை இருப்பதால் அவருக்கு மேலும் கன்கஷன் சோதனைகள் நடைபெறவுள்ளன”.
பொதுவாக கன்கஷன் சந்தேகம் இருந்தால் அந்த வீரர் உடனே இறங்க அனுமதிக்கப் பட மாட்டார்கள், ஆனால் ஸ்மித் நேற்று உடனேயே இறங்கினார்.