ஜோஃப்ரா ஆர்சர் மரணத்தை கண் முன் காட்டிவிட்டார்; ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக் !!

ஜோஃப்ரா ஆர்சர் மரணத்தை கண் முன் காட்டிவிட்டார்; ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்

ஜோஃப்ரா ஆர்சரின் பவுன்சர் பந்து தாக்கிய அந்த நிமிடம் தனக்கு பில் ஹியூக்ஸின் மரணத்தை நினைவுபடுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது ஜாப்ரா ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியது.

உடனே நிலைகுலைந்து சரிந்தார் ஸ்டீவ் ஸ்மித். அப்போது பில் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்ததுதான் நினைவுக்கு வந்தது என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஆர்சர் பந்து கழுத்துப் பகுதியை தாக்கியபோது பல்வேறு விஷயங்கள் என்னுடைய மனதில் ஓடியது. குறிப்பாக பந்து தாக்கியதும் பில் ஹியூக்ஸ் சம்பவம்தான் கண்முன் தோன்றியது.

LEEDS, ENGLAND – AUGUST 24: Josh Hazlewood of Australia celebrates taking the wicket of Rory Burns of England with his teammates during Day Three of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 24, 2019 in Leeds, England. (Photo by Alex Davidson/Getty Images)

பின்னர், நான் நல்ல நினைவோடு இருப்பதாக உணர்ந்தேன். முதலில் சற்று கவலையாக இருந்தது. ஆனால், மனதளவில் உள்பட எல்லாவற்றிலும் சரியாகிவிட்டேன்’’ என்றார்.

 

Mohamed:

This website uses cookies.