இப்போ விட்டுட்டோம்.. ஆனால் இந்தியாவுல நடக்குறப்போ நம்ம தான் கப் அடிக்கிறோம் – பாகிஸ்தானுக்கு மேத்தியூ ஹைடன் ஆறுதல்!

இப்போது விட்டுவிட்டோம், ஆனால் இந்தியாவில் நடக்கும்போது உலககோப்பையை நாம் தான் வெல்வோம்  என்று பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கிறார் ஹைடன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற பாகிஸ்தான் அணி, துரதிஷ்டவசமாக இங்கிலாந்து அணியிடம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையை இழந்ததுள்ளது.

தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேப்டனாக இருந்து வெற்றி பெற்ற இரண்டாவது உலகக் கோப்பை இதுவாகும். இப்படி ஒரு பெருமை ஜோஸ் பட்லருக்கு சென்றிருக்கிறது. முதல்முறையாக இங்கிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் வழிநடத்திய ஜோஸ் பட்லர், மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு பங்காற்றி இருக்கிறார்.

லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு, அப்படியே எங்களது அணுகுமுறையை மாற்றி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாட்டினோம் என்று நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதே குதிரை கொம்பாக இருந்தது. நடுவில் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அப்செட் செய்ததால், பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து இறுதி போட்டி வரை முன்னேறி இருக்கிறது.

இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் பயிற்சியாளர் மேத்தியூ ஹைடன் நம்பிக்கை அளிக்கும் விதமாக சில வார்த்தைகள் பேசி இருக்கிறார். அதாவது, “நான் இந்த அணியில் என்னுடன் பயணித்த நிர்வாகிகள் சார்பாகவும் என் சார்பாகவும் கூறுவது என்னவென்றால், பாகிஸ்தான் அணியுடன் பயணித்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. கடந்த மாதம் எனது வீட்டில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது, உங்களுக்கு நான் கொடுத்த நம்பிக்கை, இந்த உலகக் கோப்பை நாம் நிச்சயம் வெல்வோம் என்றேன். அதில் இப்போதும் எனக்கு மாற்றம் இல்லை.

மீண்டும் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இந்த இளம் பட்டாளத்தை வைத்து உலக கோப்பையை வெல்வோம். வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இதுவரை நாம் வந்த விதத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

இம்முறை இல்லை என்றால் என்ன நிச்சயம் அடுத்த வருடம் நடக்கும் உலக கோப்பையில், இந்தியா சென்று கைப்பற்றுவோம். இவ்வளவு தூரம் நாம் ஒன்றாக வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்திலும் ஒன்றாக பயணிப்போம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.