இந்த முறை இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும்; சுரேஷ் ரெய்னா விருப்பம் !!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் லக்னோ சூப்பர் ஜெயின்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதனால் எப்படியாவது இந்த வருட கோப்பையை தட்டி தூக்கவேண்டுமென்று ஒவ்வொரு அணியும் தீவிர முயற்சியிலும் பல யுக்திகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும் எந்த அணி இந்த வருடம் கோப்பையை வெல்லப்போகிறது என்று தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களை அதிகமாக பேசி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த வருடம் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதில்,“இந்த வருட ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இதற்கு காரணம் விராட் கோலி” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை, இதனால் விரக்தி அடைந்த கேப்டன் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். என்னதான் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் தன் விளையாடும் காலம் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தான் விளையாடுவேன் என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் பெங்களூரு அணியை வெறுக்கும் ரசிகர்கள் கூட இந்த வருட கோப்பையை விராட் கோலி விளையாடும் பெங்களூர் அணி வெல்ல வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.