ஸ்டூவர்ட் பிராட் கடந்த வாரம் தனது கவுண்டி சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் வோர்கெஸ்டெர்ஷையருக்கு எதிராக நோட்டிங்ஹாம்ஷையருக்கு பந்து வீச்சில் ஈடுபடும் பொழுது காயம் ஏற்பட்டதால், அவரது இடது கணுக்கால் ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. இதுகுறித்து பயிற்சியாளர். கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் உடல்நிலை கவலைக்கிடம்
வோர்கெஸ்டெர்ஷையர் பயிற்சியாளர், பீட்டர் மூர்ஸ், கூறுகையில், பிராட் தற்போது கணுக்கால் காயம் காரணமாக பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். இது தற்போது சமாளிக்க கூடிய ஒன்று என்றாலும், இந்தியாவிற்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்க இருக்கும் போட்டியில் இவர் இடம்பெறுவது சந்தேகம் தான்.
மேலும், சில வாரங்களுக்கு முன்பு ஆண்டர்சன் க்கும் தோள்பட்டை காயம் காரணமாக 6 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மீண்டும் வருவார் என எதிர்பார்க்க படுகிறது.
இப்படி, முன்னணி பந்துவீச்சாளர்கள் இருவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், மீண்டு வரமுடியாத பட்சத்தில், இவர்களுக்கு பதிலாக யாரை இணைப்பது என தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
மேலும், பயிற்சியாளர் கூறுகையில், ஒரு நாள் ஒரு செஷன் மட்டும் பிராட் ஆல் பந்துவீச முடியும், முழுநேர பந்துவீச்சாளராக செயல்படுவது என்பது கடினம் என கூறினார்.