மகேந்திர சிங் தோனியின் அந்த ஒரு அறிக்கையால் எங்களால் இரண்டு மூன்று நாட்களுக்கு தூங்க முடியவில்லை – ருத்ராஜ் சோகம்

மகேந்திர சிங் தோனியின் அந்த ஒரு அறிக்கையால் எங்களால் இரண்டு மூன்று நாட்களுக்கு தூங்க முடியவில்லை – ருத்ராஜ் சோகம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் வைத்து மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அந்த அறிக்கையை வெளியிட்டார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு அறிக்கையையும் வெளியிட்டார்.

மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிக்கையை வெளியிடும் நிலையில் அவருடன் பங்கு பெற்றிருந்த சென்னை அணியின் வீரர் ருத்ராஜ் தற்பொழுது அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

முதலில் நாங்கள் நம்பவில்லை

மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் சென்னையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென இரவு மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளார் என்று செய்தி வந்தது. நாங்கள் அப்பொழுது தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நானும் என்னுடன் இருந்த ஒரு சில வீரர்களும் முதலில் அந்த செய்தியை நம்பவில்லை.

பின்னர் தான் தெரிய வந்தது அது உண்மைதான் என்று. எப்படியும் குறைந்தபட்சம் ஒரு வருடம் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று நான் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரது ஆய்வு அறிக்கை என்னை உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அதிலிருந்து வெளிவர எங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்பட்டது

அவர் வெளியிட்ட அதற்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு அறிக்கை வெளியிட்டார். எனவே எங்களுக்கு அடுத்தடுத்து கஷ்டமாக இருந்தது. இவர்களது ஓய்வு பற்றி அவர்களிடம் நாங்கள் சென்று கேட்பது சரியாக இருக்காது என்று எண்ணினோம்.
எங்களால் தைரியமாகப் போய் ஏன் இவ்வளவு சீக்கிரமாக ஓய்வு அறிக்கையை வெளியிடுகிறார் என்று கேட்கவும் முடியவில்லை.

மேலும் இரண்டு மூன்று நாட்கள் அந்த விஷயத்தில் இருந்து தான் உட்பட தன்னுடன் இருந்த ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்களும் வெளிவர முடியவில்லை என்றும் ருத்ராஜ் கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.