மேலும் ஒரு அதிர்ச்சி : பும்ராவை தொடர்ந்து ஆல்ரவுண்டர் சுந்தரும் டி20 தொடரில் இருந்து வெளியேறினார்!!

அயர்லாந்தில், பயிற்சியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும்,

தமிழக இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆல்ரவுண்டரான இவர், இலங்கையில் நடந்த நிஹடாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். இதையடுத்து இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

இந்நிலையில் அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற இருந்தார். இந்நிலையில் நேற்று முன் நடந்த பயிற்சியின் போது அவர் காலில் படுகாயமடைந்தார். மைதானத்தில் கால்பந்து விளையாடுபோது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் தவித்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி நேரத்தின் போது எதிர்பாராத விதமாக கணுக்காலில் அதிக அழுத்தம் கொடுத்த வாசிங்டன் சுந்தர். அப்படியே வலி தாங்காமல் கீழே விழுந்தார். பின்னர் அவரால நடக்க முடியாத காரணத்தால் நொண்டி நொண்டி நடக்க, இந்திய அணியின் பிஸியோ மற்றும் உதவியாளர் ஆகியோர் அவரை மைதானத்திற்கு வெளியே அழைத்து சென்றனர்.

அவரது காயத்தின் தன்மை குறித்து பிஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏதும் தெரிவிக்கவில்லை. காயம் கடுமையாக இருந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அவர் விலககியுள்ளார். அவருக்கு பதில் அக்சர் படேல், அல்லது குணால் பாண்ட்யா சேர்க்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர் இதுவரை ஒரு ஒரே சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் 6 டி20 போட்டியிலுமே பங்கேற்றுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 அணி :

  1. விராத் கோலி ( கே )
  2. யூசுவெந்திர சஹால்
  3. ஷிகார் தவான்
  4. MS டோனி ( கீ )
  5. தினேஷ் கார்த்திக் (கீ )
  6. சித்தார்த் கவுல்
  7. புவனேஷ்வர் குமார்
  8. மணீஷ் பாண்டே
  9. ஹார்டிக் பாண்டியா
  10. KL ராகுல்
  11. சுரேஷ் ரெய்னா
  12. ரோஹித் ஷர்மா
  13. குல்தீப் யாதவ்
  14. உமேஷ் யாதவ்

Editor:

This website uses cookies.