கிரிக்கெட் கேப்டன் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேஷாத்ரி
இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இன்று இங்கிலாந்து புறப்பட்ட கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேஷாத்ரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுகிறது.
இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றது.
இந்திய வீரர்கள் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவை தொடர்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதில் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேஷாத்ரியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கோஹ்லி பதிவிட்டுள்ள புகைப்பட பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்துள்ள சுனில் சேஷாத்ரி அதில் உங்களுக்கும் மற்ற அனைத்து சாம்பியன்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா–இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஜூலை 3-ந்தேதி நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1-ந்தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.
இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர்போட்டியில் விளையாடுகிறது.
வருகிற 27 மற்றும் 29ம்தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படிஇரவு 8.30 போட்டிகள் மணிக்கு தொடங்குகிறது.