ஒரு மேட்ச் ஜெயிச்சா அடக்கி வாசிக்கணும்; எதிரணி கேப்டனை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கொடுத்த பேட்டிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென்ஆப்பிரிக்க அணி. தற்போது 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணிக்கு கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார் கேப்டன் டீன் எல்கர். இவர் 96 ரன்கள் அடித்தது இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக மாறியது.

இதற்கிடையில் போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த எல்கர்,  “நாங்கள் விளையாடிய விதம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. கடைசி வரை அவர்கள் பயத்தில் விளையாடியதால், எங்களால் எளிதாக வெற்றியைப் பெற முடிந்தது. அடுத்த போட்டியிலும் இதே போல் விளையாடினால் எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. நாங்களும் அதற்காக சிறுபிள்ளை தனமாக விளையாடவும் முடியாது.” என நகைப்புடன் பேட்டியளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், வர்ணனை செய்து கொண்டிருக்கும்போது இதற்கு தக்க பதிலடி கொடுத்தார். “இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோல்வியை தழுவினார்கள். ஆனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று விட்ட காரணத்தினால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நீங்கள் அன்றைய போட்டியை வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆகிவிடாது. இந்திய அணி அடுத்த போட்டியில் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும். வெற்றி பெற்றால் அதனை தலையில் ஏற்றிக்கொள்ள கூடாது.” என்று கடுமையாக சாடினார்.

எல்கர் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தி நிலவியது. ஏனெனில் வெற்றி பெற்றுவிட்ட களிப்பில் இந்திய அணியை அவர் மட்டம் தட்டி பேசிய விதம் முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது.

இதற்கிடையில் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.